Kural 531
குறள் 531
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு
irandhtha vaekuliyin theethae sirandhtha
uvakai makilchiyitr chorvu
Shuddhananda Bharati
Worse than wrath in excess is
Forgetfulness in joy-excess.
GU Pope
'Tis greater ill, it rapture of o'erweening gladness to the soul
Bring self-forgetfulness than if transcendent wrath control.
More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy.
Mu. Varadarajan
பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும்போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.
Parimelalagar
சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு-மிக்க உவகைக் களிப்பான் வரும் மறவி; இறந்த வெகுளியின் தீது-அரசனுக்கு அளவிறந்த வெகுளியினும் தீது.
விளக்கம்:
[மிக்க உவகை பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்று இவற்றான் வருவது. அளவு, பகைவரை அடர்த்தற்கும் கொடியோரை ஒறுத்தற்கும் வேண்டுவது. இறந்த வெகுளி: ஒரோவழிப் பகைவரையும் கொல்லும்; இஃது அன்னதன்றித் தன்னையே கோறலின், அதனினும் தீதாயிற்று.]
Manakkudavar
பொச்சாவாமையாவது மறவியின்றி யொழுகுதல். அது தனது சோர்வு பார்த்துப் பிறர் வஞ்சகஞ் செய்யுமிடங்களினும், அறம் பொருளின்பங்கள் செய்ய வேண்டுமிடங்களிலும் மறத்தலின்மை. பொச்சாப்பு எனினும் மறவி எனினும் இகழ்ச்சி எனினும் ஒக்கும். (இதன் பொருள்) மிகுத்த வெகுளியினும் தனக்குத் தீமையைச் செய்யும் ; மிக்க உவகைக்களிப்பினால் வரும் மறப்பு,
(என்றவாறு). தனக்குச் சிறந்த உவகை தன் மகிழ்ச்சியாற் சோருஞ் சோர்வு என்றும், உய்க்க வேண்டுமவரிடத்து உய்க்கும் உவகை என்றுமாம்.