குறள் 480

வலியறிதல்

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்

ulavarai thookkaatha oppura vaanmai
valavarai vallaik kedum


Shuddhananda Bharati

Judging strength

Wealth amassed quickly vanishes
Sans level if one lavishes.


GU Pope

The Knowledge of Power

Beneficence that measures not its bound of means,
Will swiftly bring to nought the wealth on which it leans.

The measure of his wealth will quickly perish, whose liberality weighs not the measure of his property.


Mu. Varadarajan

தனக்குப்‌ பொருள்‌ உள்ள அளவை ஆராயாமல்‌ மேற்கொள்ளும்‌ ஒப்புரவினால்‌, ஒருவனுடைய செல்வத்தின்‌ அளவு விரைவில்‌ கெடும்‌.


Parimelalagar

உள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை - தனக்குள்ள அளவு தூக்காமைக்கு ஏதுவாய ஒப்புரவாண்மையால்; வளவரைவல்லைக் கெடும் - ஒருவன் செல்வத்தின் எல்லை விரையக் கெடும்
விளக்கம்:
['ஒப்புரவே ஆயினும் மிகலாகாது' என்றமையான், இதுவும் அது. இவை நான்கு பாட்டானும் மூவகை ஆற்றலுள் பெருமையின் பகுதியாய பொருள் வலியறிதல் சிறப்பு நோக்கி வகுத்துக் கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) தனக்கு உள்ளவளவை நினையாதே ஒப்புரவு செய்வானது செல் வத்தினளவு விரைவிற் கெடும்,
(என்றவாறு). மேல், முதலுக்குச் செலவு குறைய வேண்டுமென்றார் அவ்வாறு செய் யின் ஒப்புரவு செய்யுமாறு என்னை யென்றார்க்கு, இது கூறினார்.