குறள் 478

வலியறிதல்

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை

aakaaru alavitti thaayinung kaetillai
pokaaru akalaak katai


Shuddhananda Bharati

Judging strength

The outflow must not be excess
No matter how small income is.


GU Pope

The Knowledge of Power

Incomings may be scant; but yet, no failure there,
If in expenditure you rightly learn to spare.

Even though the income (of a king) be small, it will not cause his (ruin), if his outgoings be not largerthan his income.


Mu. Varadarajan

பொருள்‌ வரும்‌ வழி (வருவாய்‌) சிறியதாக இருந்தாலும்‌, போகும்‌ வழி (செலவு) விரிவுபடாவிட்டால்‌ அதனால்‌ தீங்கு இல்லை.


Parimelalagar

ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் கேடு இல்லை - அரசர்க்குப் பொருள் வருகின்ற நெறியளவு சிறிதாயிற்றாயினும் அதனால் கேடு இல்லையாம்; போகு ஆறு அகலாக் கடை - போகின்ற நெறி அளவு அதனின் பெருகாதாயின்.
விளக்கம்:
['இட்டிது' எனவும் 'அகலாது' எனவும் வந்த பண்பின் தொழில்கள் பொருள் மேல் நின்றன. 'பொருள்' என்பது அதிகாரத்தான் வருவித்து, 'அளவு' என்பது பின்னும் கூட்டி உரைக்கப்பட்டன. முதலும் செலவும் தம்முள் ஒப்பினும் கேடு இல்லை என்பதாம்.]


Manakkudavar

(இதன் பொருள்) பொருள் வரும் வழியளவு சிறிதாயினும் கேடில்லையாம்; அது போம்வழி போகாதாயின்,
(என்றவாறு). இது முதலுக்குத் தக்க செலவு செய்ய வேண்டுமென்றது.