குறள் 477

வலியறிதல்

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி

aatrrin aravarindhthu eeka athuporul
potrri valangku naeri


Shuddhananda Bharati

Judging strength

Know the limit; grant with measure
This way give and guard your treasure.


GU Pope

The Knowledge of Power

With knowledge of the measure due, as virtue bids you give!
That is the way to guard your wealth, and seemly live.

Let a man know the measure of his ability (to give), and let him give accordingly; such giving is theway to preserve his property.


Mu. Varadarajan

தக்க வழியில்‌ பிறர்க்குக்‌ கொடுக்கும்‌ அளவு அறிந்து கொடுக்கவேண்டும்‌; அதுவே பொருளைப்‌ போற்றி வாழும்‌ வழியாகும்‌.


Parimelalagar

ஆற்றின் அளவு அறிந்து ஈக - ஈயும் நெறியானே தமக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக; அது பொருள்போற்றி வழங்கும் நெறி - அங்ஙனம் ஈதல் பொருகாப் பேணிக் கொண்டொழுகும் நெறியாம்.
விளக்கம்:
[ஈயும் நெறி மேலே இறைமாட்சியுள் ''வகுத்தலும் வல்லதரசு'' (குறள்.385) என்புழி உரைத்தாம். எல்லைக்கு ஏற்ப ஈதலாவது, ஒன்றான எல்லையை நான்கு கூறாக்கி, அவற்றுள் இரண்டனைத் தன் செலவாக்கி, ஒன்றனை மேல் இடர் வந்துழி அது நீக்குதற் பொருட்டு வைப்பாக்கி, நின்ற ஒன்றனை ஈதல், பிறரும், ''வருவாயுள் கால் வழங்கி வாழ்தல்'' (திரிகடுகம், 21) என்றார். பேணிக் கொண்டு ஒழுகுதல்: ஒருவரோடு நட்பில்லாத அதனை தம்மோடு நட்புண்டாக்கிக் கொண்டு ஒழுகுதல். முதலில் செலவு சுருங்கின் பொருள் ஒருகாலும் நீங்காது என்பதாம்.]


Manakkudavar

(இதன் பொருள்) பொருளை அளவறிந்து கொடுக்கும் வழியாலே கொடுக்க ; பொருளை யுண்டாக்கி வழங்கும் நெறி அது வாதலால்,
(என்றவாறு). இது பொருளினது வலியறிந்து அதற்குத்தக்க செலவு செய்ய வேண்டும் மென்று கூறிற்று.