Kural 476
குறள் 476
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்
nunikkompar yaerinaar akhthirandh thookkin
uyirkkiruthi aaki vidum
Shuddhananda Bharati
Beyond the branches' tip who skips
Ends the life as his body rips.
GU Pope
Who daring climbs, and would himself upraise
Beyond the branch's tip, with life the forfeit pays.
There will be an end to the life of him who, having climbed out to the end of a branch, ventures to gofurther.
Mu. Varadarajan
ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலும் ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்
Parimelalagar
கொம்பர் நுனி ஏறினார் அஃது இறந்து ஊக்கின் - ஒருமரக் கோட்டினது நுனிக்கண்ணே ஏறி நின்றார், தம் ஊக்கத்தால் அவ்வளவினைக் கடந்து மேலும் ஏற ஊக்குவாராயின்; உயிர்க்கு இறுதி ஆகிவிடும் - அவ்வூக்கம் அவர் உயிர்க்கு இறுதியாய் முடியும்.
விளக்கம்:
['நுனிக் கொம்பர்' என்பது 'கடைக்கண்' என்பதுபோலப் பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. பன்மை அறிவின்மைபற்றி இழித்தற்கண் வந்தது. இறுதிக்கு ஏது ஆவதனை 'இறுதி' என்றார். 'பகைமேற் செல்வான் தொடங்கித் தன்னால் செல்லலாமளவும் சென்று நின்றான், பின் அவ்வளவின் நில்லாது மன எழுச்சியான் மேலும் செல்லுமாயின், அவ்வெழுச்சி வினை முடிவிற்கு ஏதுவாகாது அவனுயிர் முடிவிற்கு ஏதுவாம்' என்னும் பொருள்தோன்ற நின்றமையின், இதுவும் மேலை அலங்காரம். 'அளவு அறிந்து நிற்றல் வேண்டும்' என்றமையின், இதனான் வினைவலி அறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.]
Manakkudavar
(இதன் பொருள்) ஒருமரத்தின் நுனிக்கொம்பேறினவா தம்பள வறிந்து வைத்துப் பின்னும் மேலேறுவாராயின், அஃது அவர் தம்முயிர்க்கு இறுதியாகிவிடும்,
(என்றவாறு) இஃது அரசன் தன்னாற் செல்லலாமெல்லையளவு சென்றால், பின்பு மீள வேண்டுமென்றது. இதுவும் ஒரு வலியறிதல்.