குறள் 475

வலியறிதல்

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்

peelipaei saakaadum achirum appandanj
saala mikuththup paeyin


Shuddhananda Bharati

Judging strength

Even the gentle peacock's plume
Cart's axle breaks by gross volume.


GU Pope

The Knowledge of Power

With peacock feathers light, you load the wain;
Yet, heaped too high, the axle snaps in twain.

The axle tree of a bandy, loaded only with peacocks' feathers will break, if it be greatly overloaded.


Mu. Varadarajan

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும்‌, அந்தப்‌ பண்டமும்‌ (அளவோடு ஏற்றாமல்‌) அளவுகடந்து மிகுதியாக ஏற்றினால்‌ அச்சு முறியும்‌.


Parimelalagar

பீலிபெய் சாகாடும் அச்சு இறும் - பீலியேற்றிய சகடமும் அச்சு முரியும்; அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் - அப்பீலியை அது பொறுக்கும் அளவின்றி மிகுத்து ஏற்றின்.
விளக்கம்:
[உம்மை சாகாட்டது வலிச்சிறப்பேயு மன்றிப் பீலியது நொய்மைச் சிறப்பும் தோன்ற நின்றது. 'இறும்' என்னுஞ் சினைவினை முதல்மேல் நின்றது. 'எளியர்' என்று பலரோடு பகைகொள்வான். தான் வலியனே ஆயினும் அவர் தொக்க வழி வலியழியும்; என்னும் பொருள் தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம். இதனை 'நுவலா நுவற்சி' என்பாரும், 'ஒட்டு' என்பாரும் உளர். ஒருவர் தொகுவார் பலரோடு பகைகொள்ளற்க என்றமையின், இதனால் மாற்றான் வலியும் அவன் துணை வலியும் அறியா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) பீலி யேற்றிய சகடமும் அச்சமுறியும்; அப்பீலியை மிகவும் அளவின்றியேற்றின்,
(என்றவாறு) இஃது அரண் மிகுதல் நன் றென்றிருப்பார்க்குப் பகைமிகின் அரண் நில்லா தென்று கூறிற்று.