குறள் 474

வலியறிதல்

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்

amaindhthaang kolukaan alavariyaan thannai
viyandhthaan viraindhthu kedum


Shuddhananda Bharati

Judging strength

Who adapts not, outsteps measure
And brags himself-his fall is sure.


GU Pope

The Knowledge of Power

Who not agrees with those around, no moderation knows,
In self-applause indulging, swift to ruin goes.

He will quickly perish who, ignorant of his own resources flatters himself of his greatness, and doesnot live in peace with his neighbours.


Mu. Varadarajan

மற்றவர்களோடு ஒத்து நடக்காமல்‌. தன்‌ வலிமையின்‌ அளவையும்‌ அறியாமல்‌, தன்னை வியந்து மதித்துக்‌ கொண்டிருப்பவன்‌ விரைவில்‌ கெடுவான்‌.


Parimelalagar

ஆங்கு அமைந்து ஒழுகான் - அயல்வேந்தரோடு பொருந்தி ஒழுகுவதும் செய்யாது; அளவு அறியான் - தன் வலியளவு அறிவதும் செய்யாது; தன்னை வியந்தான் - தன்னை வியந்து அவரோடு பகைத்த அரசன்; விரைந்து கெடும் - விரையக் கெடும்
விளக்கம்:
[காரியத்தைக் காரணமாக உபசரித்து, 'வியந்தான்' என்றார். 'விரைய' என்பது திரிந்து நின்றது. நட்பாய் ஒழுகுதல், வலியறிந்து பகைத்தல் என்னும் இரண்டனுள் ஒன்றன்றே அயல் வேந்தரோடு செயற்பாலது; இவையன்றித் தான் மெலியனாய் வைத்து அவரோடு பகைகொண்டானுக்கு ஒருபொழுதும் நிலையின்மையின், 'விரைந்து கெடும்' என்றார். இவை இரண்டு பாட்டானும் தன்வலி அறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) அமைவுடையனாயொழுகுதலும் இன்றித் , தன்வலியளவும் அறிய யாதே, தன்னை மதித்தவன் விரைந்து கெடுவன், (எ - று ). இது மேற்கூறியவாறு செய்தார் கெடுவரென்றது.