குறள் 472

வலியறிதல்

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்

olva tharivathu arindhthathan kanthangkich
selvaarkkuch sellaathathu il


Shuddhananda Bharati

Judging strength

Nothing hampers the firm who know
What they can and how to go.


GU Pope

The Knowledge of Power

Who know what can be wrought, with knowledge of the means, on this,
Their mind firm set, go forth, nought goes with them amiss.

There is nothing which may not be accomplished by those who, before they attack (an enemy), makethemselves acquainted with their own ability, and with whatever else is (needful) to be known, andapply themselves wholly to their object.


Mu. Varadarajan

தனக்குப்‌ பொருந்தும்‌ செயலையும்‌, அதற்காக அறிய வேண்டியதையும்‌ அறிந்து அதனிடம்‌ நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும்‌ இல்லை ஒன்றும்‌ இல்லை.


Parimelalagar

ஒல்வது அறிவது அறிந்து - தமக்கியலும் வினையையும் அதற்கு அறிய வேண்டுவதாய வலியையும் அறிந்து; அதன்கண் தங்கிச் செல்வார்க்கு - எப்பொழுதும் மன, மொழி, மெய்களை அதன் கண் வைத்துப் பகைமேல் செல்லும் அரசர்க்கு; செல்லாதது இல் - முடியாத பொருள் இல்லை.
விளக்கம்:
['ஒல்வது' எனவே வினைவலி முதலாய மூன்றும் அடங்குதலின், ஈண்டு 'அறிவது' என்றது துணைவலியே ஆயிற்று. எல்லாப் பொருளும் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் வலியின் பகுதியும், அஃது அறிந்து மேற்செல்வார் எய்தும் பயனும் கூறப்பட்டன.]


Manakkudavar

(இதன் பொருள்) தமக்கியலும் வினைக்கு அறிய வேண்டுவதாய திறம் இதுவென அறிந்து, அதன் பின்பு அவ்வளவிலே நின்று, ஒழுகுவராயின், அவாக்கு இயலாதது இல்லை ,
(என்றவாறு). இது வலியறிந்தாலும் அடைந்தொழுக வேண்டு மென்றது.