குறள் 456

சிற்றினஞ்சேராமை

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை

manandhthooyaark kechchamnan raakum inandhthooyaarkku
illainan raakaa vinai


Shuddhananda Bharati

Avoiding mean company

Pure-hearted get good progeny
Pure friendship acts with victory.


GU Pope

Avoiding mean Associations

From true pure-minded men a virtuous race proceeds;
To men of pure companionship belong no evil deeds.

To the pure-minded there will be a good posterity. By those whose associates are pure, no deeds willbe done that are not good.


Mu. Varadarajan

மனம்‌ தூய்மையாகப்‌ பெற்றவர்க்கு அவர்க்குப்பின்‌ எஞ்சி நிற்கும்‌ புகழ்‌ முதலியவை நன்மையாகும்‌. இனம்‌ தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல்‌ இல்லை.


Parimelalagar

மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் . மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்று ஆகும்; இனம் தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லை - இனம் தூயார்க்கு நன்றாகாத வினையாதும் இல்லை.
விளக்கம்:
(காரியம் காரணத்தின் வேறுபடாமையின் 'எச்சம், நன்று ஆகும்' என்றும், நல்லினத்தோடு எண்ணிச் செய்யப்படுதலின் 'எல்லா வினையும் நல்லவாம்' என்றும் கூறினார்.)


Manakkudavar

(இதன் பொருள்) மனநல்லார்க்குப் பின்பு நிற்கும் காண முதலான பொருள்கள் நல்லவாம்; இன நல்லார்க்கு நன்றாகாத தொரு வினையும் இல்லை,
(என்றவாறு). இது மேலதற்குப் பயன் கூறிற்று.