குறள் 454

சிற்றினஞ்சேராமை

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு

manaththu lathupolak kaatti oruvatrku
inaththula thaakum arivu


Shuddhananda Bharati

Avoiding mean company

Wisdom seems to come from mind
But it truly flows from the kind.


GU Pope

Avoiding mean Associations

Man's wisdom seems the offspring of his mind;
'Tis outcome of companionship we find.

Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions.


Mu. Varadarajan

ஒருவனுக்குச்‌ சிறப்பறிவு மனத்தில்‌ உள்ளது போலக்காட்டி (உண்மையாக நோக்கும்‌ போது) அவன்‌ சேர்ந்த இனத்தில்‌ உள்ளதாகும்‌.


Parimelalagar

அறிவு - அவ் விசேட உணர்வு; ஒருவற்கு மனத்து உளது போலக் காட்டி - ஒருவற்கு மனத்தின் கண்ணே உளதாவது போலத் தன்னைப் புலப்படுத்தி; இனத்து உளதாகும் - அவன் சேர்ந்த இனத்தின்கண்ணே உளதாம்.
விளக்கம்:
(மெய்ம்மை நோக்காமுன் மனத்துளது போன்று காட்டியும், பின் நோக்கிய வழிப் பயின்ற இனத்துளதாயும் இருத்தலின், 'காட்டி' என இறந்த காலத்தால் கூறினார். 'விசேட உணர்வுதானும் மனத்தின்கண்ணே அன்றேயுளதாவது?' என்பாரை நோக்கி, ஆண்டுப் புலப்படும் துணையே உள்ளது; அதற்கு மூலம் இனம் என்பது இதனான் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒருவனுக்கு உண்டாகும் அறிவு முற்பட மனத்துள்ளது போலத் தோற்றிப், பின்பு தான் சேர்ந்த இனத்தினுண்டான அறிவாகும்,
(என்றவாறு).