Kural 453
குறள் 453
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்
manaththaanaam maandhthark kunarchi inaththaanaam
innaan yenappadunj sol
Shuddhananda Bharati
Wisdom depends upon the mind
The worth of man upon his friend.
GU Pope
Perceptions manifold in men are of the mind alone;
The value of the man by his companionship is known.
The power of knowing is from the mind; (but) his character is from that of his associates.
Mu. Varadarajan
மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும்; இப்படிப்பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல் சேர்ந்த இனத்தால் ஏற்படும்.
Parimelalagar
மாந்தர்க்கு உணர்ச்சி மனத்தான் ஆம் - மாந்தர்க்குப் பொது உணர்வு தம் மனம் காரணமாக உண்டாம்; இன்னான் எனப்படும்சொல் இனத்தான் ஆம் - 'இவன் இத்தன்மையன்' என்று உலகத்தாரான் சொல்லப்படும் சொல்இனம் காரணமாக உண்டாம்.
விளக்கம்:
(இயற்கையாய புலன் உணர்வு மாத்திரத்திற்கு இனம் வேண்டாமையின், அதனை 'மனத்தான் ஆம்' என்றும், செயற்கையாய விசேட உணர்வுபற்றி நல்லன் என்றாகத் தீயன் என்றாக நிகழும் சொற்கு இனம் வேண்டுதலின், அதனை 'இனத்தான் ஆம்' என்றும் கூறினார். உவமையளவை கொள்ளாது. 'அத் திரிபும் மனத்தான் ஆம்' என்பாரை நோக்கி, இதனான் அது மறுத்துக் கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) மாந்தர்க்கு அறிவு மனத்தினானே யுண்டாம் ; ஆயினும், தான் சேர்ந்த இனத்தினால் இனியனல்லன் என்று பிறரால் பழிக்கப்படுஞ் சொல் உண்டாம்,
(என்றவாறு). இது பிறரால் பழிக்கப்படுமென்றது.