குறள் 440

குற்றங்கடிதல்

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்

kaathala kaathal ariyaamai uikkitrpin
yaethila yaethilaar nool


Shuddhananda Bharati

Avoiding faults

All designs of the foes shall fail
If one his wishes guards in veil.


GU Pope

The Correction of Faults

If, to your foes unknown, you cherish what you love,
Counsels of men who wish you harm will harmless prove.

If (a king) enjoys, privately the things which he desires, the designs of his enemies will be useless.


Mu. Varadarajan

தன்‌ விருப்பம்‌ பிறர்க்குத்‌ தெரியாதபடி விருப்பமானவற்றை நுகர வல்லவனானால்‌, பகைவர்‌ தன்னை வஞ்சிப்பதற்காகச்‌ செய்யும சூழ்ச்சிகள்‌ பலிக்காமல்‌ போகும்‌.


Parimelalagar

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் - தான் காதலித்த பொருள்களை அவர் அக்காதல் அறியாமல் அனுபவிக்க வல்லனாயின்; ஏதிலார் நூல் ஏதில - பகைவர் தன்னை வஞ்சித்தற்கு எண்ணும் எண்ணம் பழுதாம்.
விளக்கம்:
(அறிந்தவழி அவை வாயிலாகப் புகுந்து வஞ்சிப்பர் ஆகலின், அறியாமல் உய்த்தால் வாயில் இன்மையின் வஞ்சிக்கப்படான் என்பதாம். காமம், வெகுளி, உவகை என்பன முற்றக்கடியும் குற்றம் அன்மையின், இதனான் பெரும்பான்மைத்தாகிய காமம் நுகருமாறு கூறி, ஏனைச் சிறுபான்மையவற்றிற்குப் பொதுவகை விலக்கினையே கொண்டொழிந்தார்.)


Manakkudavar

(இதன் பொருள்) காதலிக்கப்பட்ட யாவற்றின் மேலுஞ் செல்லுங் காதலைப் பிறர றியாமற் செலுத்துவனாயின், பகைவர் இவனைக் கொல்லுமாறு சிந்திக்கும் சிந்தனை இவன் மாட்டுச் செல்லாது அயலாம்,
(என்றவாறு) நூலென்பது அவர் கற்ற கல்வி.