குறள் 441

பெரியாரைத் துணைக்கோடல்

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்

aranarindhthu mooththa arivutaiyaar kaenmai
thiranarindhthu thaerndhthu kolal


Shuddhananda Bharati

Gaining great men's help

Weigh their worth and friendship gain
Of men of virtue and mature brain.


GU Pope

Seeking the Aid of Great Men

As friends the men who virtue know, and riper wisdom share,
Their worth weighed well, the king should choose with care.

Let (a king) ponder well its value, and secure the friendship of men of virtue and of matureknowledge.


Mu. Varadarajan

அறம்‌ உணர்ந்தவராய்த்‌ தன்னைவிட மூத்தவராய்‌ உள்ள அறிவுடையவரின்‌ நட்பைக்‌, கொள்ளும்‌ வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்‌.


Parimelalagar

அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை - அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை; தேர்ந்து திறன் அறிந்து கொளல் - அரசன் அதனது அருமையை ஓர்ந்து, கொள்ளும் திறன் அறிந்து கொள்க.
விளக்கம்:
(அறநுண்மை நுலானேயன்றி, உய்த்துணர்வானும் அறிய வேண்டுதலின், 'அறம் அறிந்து' என்றார். மூத்தல் - அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்தல். அறிவு உடையார் நீதியையும் உலக இயலையும் அறிதலை உடையார். திறன் அறிதலாவது நன்கு மதித்தல், உயரச் செய்தல், அவர் வரை நிற்றல் என்பன முதலாக அவர் பிணிப்புண்ணும் திறன் அறிந்து செய்தல்.)


Manakkudavar

பெரியாரைத் துணைக்கோடலாவது தம்மின் முதிர்ந்த அறிவுடையாரைத் தமக்குத் துணையாகக் கொள்ளுதல். அரசன் குற்ற மற்றானாயினும், தன்னின் முதிர்ந்த அறிவுடையாரைத் துணையாகக் கொண்டு வினை செய்ய வேண்டுதலின், இஃது அதன்பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) அறத்தின் பகுதியறிந்து முதிர்ந்த அறிவுடையாரது கேண் மையை அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து ஆராய்ந்து கொள்க ,
(என்றவாறு). இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று.