Kural 436
குறள் 436
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு
thankutrram neekkip pirarkutrrang kaankitrpin
yenkutrra maakum iraikku
Shuddhananda Bharati
What fault can be the king's who cures
First his faults, then scans others.
GU Pope
Faultless the king who first his own faults cures, and then
Permits himself to scan faults of other men.
What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils ofothers.
Mu. Varadarajan
முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கிப் பிறகு பிறருடைய குற்றத்தை ஆராயவல்லவனானால் தலைவனுக்கு என்ன குற்றமாகும்?
Parimelalagar
தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின் - முன்னர்த் தன் குற்றத்தைக் கண்டு கடிந்து, பின்னர்ப் பிறர் குற்றங்காண வல்லனாயின்; இறைக்கு ஆகும் குற்றம் என் - அரசனுக்கு ஆகக்கடவ குற்றம் யாது?
விளக்கம்:
('அரசனுக்குத் தன் குற்றம் கடியா வழியே பிறர் குற்றம் கடிதல் குற்றமாம்; அது கடிந்தவழி முறை செய்தலாம்' என்பார், 'என் குற்றம் ஆகும்' என்றார்; எனவே, தன் குற்றம் கடிந்தவனே முறை செய்தற்கு உரியவன் என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் அவற்றது கடிதற்பாடு பொதுவகையால் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையால் கூறுப.)
Manakkudavar
(இதன் பொருள்) தனக்குள்ள குற்றத்தை நீக்கிப் பிறர்மாட்டுள்ள குற்றத்தை ஆராயவல்லனாயின், அரசனுக்கு என்ன குற்ற முள் தாம் ?
(என்றவாறு) இது தன் மாட்டுள்ள குற்றத்தை நீக்குதலே யன்றிப் பிறர்மாட்டுள்ள குற்றத்தையும் கடிய வேண்டுமென்றது.