குறள் 435

குற்றங்கடிதல்

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்

varumunnark kaavaathaan vaalkkai yerimunnar
vaiththooru polak kedum


Shuddhananda Bharati

Avoiding faults

Who fails to guard himself from flaw
Loses his life like flame-lit straw.


GU Pope

The Correction of Faults

His joy who guards not 'gainst the coming evil day,
Like straw before the fire shall swift consume away.

The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire.


Mu. Varadarajan

குற்றம்‌ நேர்வதற்கு முன்னமே வராமல்‌ காத்துக்‌ கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின்முன்‌ நின்ற வைக்கோல்போர்போல்‌ அழிந்துவிடும்‌.


Parimelalagar

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை - குற்றம் வரக் கடவதாகின்ற முற்காலத்திலே அதனைக் காவாத அரசன் வாழ்க்கை; எரி முன்னர் வைத்தூறு போலக் கெடும் - அது வந்தால் எரிமுகத்து நின்று வைக்குவை போல அழிந்து விடும்.
விளக்கம்:
('குற்றம்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'முன்னர் என்றதன் ஈற்றது பகுதிப்பொருள் விகுதி. 'வரும்' என்னும் பெயரெச்சம் 'முன்னர்' என்னும் காலப்பெயர் கொண்டது; அதனால் காக்கலாம் காலம் பெறப்பட்டது. குற்றம் சிறிதாயினும், அதனால் பெரிய செல்வம் அழிந்தே விடும் என்பது உவமையால் பெற்றாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) துன்பம் வருவதன்முன், அதற்குத் தக்கது அறிந்து காவல் செய் யானது செல்வம், எரிமுன்னர்க்கிடந்த வைத்திரள் போலக் கெடும்,
(என்றவாறு). இது முந்துற்றுக் காவல் செய்வன செய்யாமையும் குற்ற மென்றது.