Kural 434
குறள் 434
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை
kutrramae kaakka porulaakak kutrramae
atrrandh throoum pakai
Shuddhananda Bharati
Watch like treasure freedom from fault
Our fatal foe is that default.
GU Pope
Freedom from faults is wealth; watch heedfully
'Gainst these, for fault is fatal enmity.
Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy.
Mu. Varadarajan
குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும். ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ளவேண்டும்.
Parimelalagar
அற்றம் தருஉம் பகை குற்றமே - தனக்கு இறுதி பயக்கும் பகை குற்றமே; குற்றமே பொருளாகக் காக்க - ஆகலான், அக்குற்றம் தன்கண் வாராமையே பயனாகக் கொண்டு காக்க வேண்டும்.
விளக்கம்:
(இவைபற்றி அல்லது பகைவர் அற்றம் தாரா மையின் 'இவையே பகையாவன' என்னும் வடநூலார் மதம் பற்றி, 'குற்றமே அற்றம் தருஉம் பகை' என்றும், இவற்றது இன்மையே குணங்களது உண்மையாகக் கொண்டு என்பார், 'பொருளாக' என்றும் கூறினார். 'குற்றமே காக்க' என்பது "அரும்பண்பினால் தீமை காக்க," என்பதுபோல நின்றது.)
Manakkudavar
(இதன் பொருள்) தமக்குப் பொருளாகக் குற்றம் வாராமற்காக்க ; அக்குற்றந்தானே இறுதியைத் தரும் பகையும் ஆதலான்,
(என்றவாறு). இது குற்றங் கடிய வேண்டு மென்றது.