குறள் 433

குற்றங்கடிதல்

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்

thinaiththunaiyaang kutrram varinum panaiththunaiyaak
kolvar palinaanu vaar


Shuddhananda Bharati

Avoiding faults

Though millet-small their faults might seem
Men fearing disgrace, Palm-tall deem.


GU Pope

The Correction of Faults

Though small as millet-seed the fault men deem;
As palm tree vast to those who fear disgrace 'twill seem.

Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as apalmyra tree.


Mu. Varadarajan

பழி நாணுகின்ற பெருமக்கள்‌ தினையளவாகிய சிறு குற்றம்‌ நேர்ந்தாலும்‌, அதைப்‌ பனையளவாகக்‌ கருதிக்‌ (குற்றம்‌ செய்யாமல்‌) காத்துக்கொள்வர்‌.


Parimelalagar

பழி நாணுவார் - பழியை அஞ்சுவார்; தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் - தம்கண் தினையின் அளவாம் குற்றம் வந்ததாயினும், அதனை அவ்வளவாக அன்றிப் பனையின் அளவாகக்' கொள்வர்.
விளக்கம்:
('குற்றம்' சாதிப் பெயர். தமக்கு ஏலாமையின் சிறிது என்று பொறார்; பெரிதாகக் கொண்டு வருந்திப் பின்னும் அது வாராமல் காப்பர் என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) தினையளவு குற்றம் வந்ததாயினும், அதனை அவ்வளவிற்றென்று இகழாது பனையளவாகக் கொள்வர் பழிக்கு நாணுவார்,
(என்றவாறு)