Kural 432
குறள் 432
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு
ivaralum maanpirandhtha maanamum maanaa
uvakaiyum yaetham iraikku
Shuddhananda Bharati
Mean pride, low pleasure, avarice
These add blemishes to a prince.
GU Pope
A niggard hand, o'erweening self-regard, and mirth
Unseemly, bring disgrace to men of kingly brith.
Avarice, undignified pride, and low pleasures are faults in a king.
Mu. Varadarajan
பொருள் கொடாத தன்மையும், மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பவனுக்குக் குற்றங்களாகும்.
Parimelalagar
இவறலும் - வேண்டும்வழிப் பொருள் கொடாமையும்; மாண்பு இறந்த மானமும் - நன்மையின் நீங்கிய மானமும்; மாணா உவகையும் - அளவிறந்த உவகையும்; இறைக்கு ஏதம் - அரசனுக்குக் குற்றம்.
விளக்கம்:
(மாட்சியான மானத்தின் நீக்குதற்கு 'மாண்பு இறந்த மானம்' என்றார்; அஃதாவது, ''அந்தணர் சான்றோர் அருந்தவதோர் தம் முன்னோர் தந்தை தாய் என்றிவ"ரை (புறம். வெ.மா. பாடாண்-33) வணங்காமையும், முடிக்கப்படாதாயினும் கருதியது முடித்தே விடுதலும் முதலாயின. அளவிறந்த உவகையாவது, கழிகண்ணோட்டம்; பிறரும், "சினனே காமம் கழிகண்ணோட்டம்" என்றிவற்றை "அறந்தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது" (பதிற். 22) என்றார். இவை இரண்டு பாட்டானும் குற்றங்களாவன இவை என்பது கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) உலோபமும், நன்மையைக் கடந்த மானமும், நன்மையைத் தாரா மகிழ்ச்சியுமாகிய விம்மூன்றும் அரசர்க்குக் குற்றமாம்,
(என்றவாறு). இது பொதுப்படக் கூறாது இறைக்கு என்றமையால், பெரும்பான்மையும் அரசர்க்க வேண்டுமென்பது கூறிற்று.