குறள் 431

குற்றங்கடிதல்

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து

serukkuchiinamuchiirumaiyum illaar paerukkam paerumitha
paerukkam paerumitha neerththu


Shuddhananda Bharati

Avoiding faults

Plenty is their prosperity
Who're free from wrath pride lust petty.


GU Pope

The Correction of Faults

Who arrogance, and wrath, and littleness of low desire restrain,
To sure increase of lofty dignity attain.

Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust.


Mu. Varadarajan

செருக்கும்‌ சினமும்‌ காமமும்‌ ஆகிய இந்தக்‌ குற்றங்கள்‌ இல்லாதவருடைய வாழ்வில்‌ காணும்‌ பெருக்கம்‌ மேம்பாடு உடையதாகும்‌.


Parimelalagar

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் - மதமும் வெகுளியும் காமமும் ஆகிய குற்றங்கள் இல்லாத அரசரது செல்வம்; பெருமித நீர்த்து - மேம்பாட்டு நீர்மையினை உடைத்து.
விளக்கம்:
(மதம்: செல்வக்களிப்பு. சிறியோர் செயலாகலின், அளவிறந்த காமம் 'சிறுமை' எனப்பட்டது. இவை நீதியல்லன செய்வித்தலான், இவற்றைக் கடிந்தார் செல்வம் நல்வழிப்பாடும், நிலைபேறும் உடைமையின், மதிப்புடைத்து என்பதாம். மிகுதிபற்றி இவை முற்கூறப்பட்டன.)


Manakkudavar

குற்றங்கடிதலாவது காமக் குரோத லோப மோக மத மாற்சரிய மென்னும் ஆறு குற்றமுங் கடிந்து ஒழுகுதல். இஃது அறிவுடையாராயினும் குற்றங்கடிதல் வேண்டுமென்று அதன்பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) பிறர்மனை நயத்தலும், வெகுளியும், சிறியார் செய்வன செய் தொழுகுதலும் இல்லாதார்க்கு ஆக்கம் தலையெடுக்கும் நீர்மை யுடைத்து,
(என்றவாறு) பிறர்மனை விரும்புதல் செருக்கினால் வருதலின், செருக்கு என்றார்.