குறள் 419

கேள்வி

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது

nunangkiya kaelviya rallaar vanangkiya
vaayina raathal arithu


Shuddhananda Bharati

Listening

A modest mouth is hard for those
Who care little to counsels wise.


GU Pope

Hearing

'Tis hard for mouth to utter gentle, modest word,
When ears discourse of lore refined have never heard.

It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choiceinstruction.


Mu. Varadarajan

நுட்பமான பொருள்களைக்‌ கேட்டறிந்தவர்‌ அல்லாத மற்றவர்‌, வணக்கமான சொற்களைப்‌ பேசும்‌ வாயினை உடையவராக முடியாது.


Parimelalagar

நுணங்கிய கேள்வியர் அல்லார் - நுண்ணியதாகிய கேள்வியுடையார் அல்லாதார்; வணங்கிய வாயினர் ஆதல் அரிது - பணிந்த மொழியினை உடையராதல் கூடாது.
விளக்கம்:
(கேட்கப்படுகின்ற பொருளினது நுண்மை கேள்விமேல் ஏற்றப்பட்டது. 'வாய்' ஆகுபெயர். பணிந்தமொழி - பணிவைப் புலப்படுத்திய மொழி. கேளாதார் உணர்வு இன்மையால் தம்மை வியந்து கூறுவர் என்பதாம். 'அல்லால்' என்பதூஉம் பாடம்.)


Manakkudavar

(இதன் பொருள்) நுண்ணிதாகிய கேள்வியை யுடையாரல்லாதார், தாழ்ந்த சொற் கூறும் நாவுடையாராதல் இல்லை,
(என்றவாறு) இது கேள்வியுடையார் தம்மை வியந்து சொல்லா ரென்றது.