குறள் 418

கேள்வி

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி

kaetpinung kaelaath thakaiyavae kaelviyaal
thotkap pataatha sevi


Shuddhananda Bharati

Listening

That ear though hearing is dulled
Which is not by wisdom drilled.


GU Pope

Hearing

Where teaching hath not oped the learner's ear,
The man may listen, but he scarce can hear.

The ear which has not been bored by instruction, although it hears, is deaf.


Mu. Varadarajan

கேள்வியறிவால்‌ துளைக்கப்படாத செவிகள்‌, (இயற்கையான துளைகள்‌ கொண்டு ஓசையைக்‌) கேட்டறிந்தலும்‌, கேளாத செவிட்டுத்‌ தன்மை உடையனவே.


Parimelalagar

கேட்பினும் கேளாத் தகையவே - தம் புலமாய ஓசை மாத்திரத்தைக் கேட்கும் ஆயினும் செவிடாம் தன்மையவேயாம். கேள்வியால் தோட்கப்படாத செவி - கேள்வியால் துளைக்கப்படாத செவிகள்.
விளக்கம்:
(ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. ஓசை மாத்திரத்தான் உறுதி எய்தாமையின் 'கேளாத்தகைய' என்றும், மனத்தின்கண் நூற்பொருள் நுழைதற்கு வழியாக்கலிற் கேள்வியைக் கருவியாக்கியும் கூறினார். 'பழைய துளை துளையன்று' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒசை மாத்திரம் கேட்டனவாயினும், அதுவுங் கேளாத செவி போலும்; நல்லோர் கூறுஞ் சொற்களால் துளைக்கப்படாத செவி,
(என்றவாறு). இது கேள்வியில்லாதார் செவிட ரென்றது.