குறள் 40

அறன்வலியுறுத்தல்

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி

seyatrpaala thorum aranae oruvatrku
uyatrpaala thorum pali


Shuddhananda Bharati

The power of virtue

Worthy act is virtue done
Vice is what we ought to shun.


GU Pope

Assertion of the Strength of Virtue

'Virtue' sums the things that should be done;
'Vice' sums the things that man should shun.

That is virtue which each ought to do, and that is vice which each should shun.


Mu. Varadarajan

ஒருவன்‌ வாழ்நாளில்‌ முயற்சி மேற்கொண்டு செய்யத்‌ தக்கது அறமே, செய்யாமல்‌ காத்துக்‌ கொள்ளத்‌ தக்கது பழியே.


Parimelalagar

ஒருவற்குச் செயற்பாலது அறனே-ஒருவனுக்குச் செய்தற்பான்மையானது நல்வினையே; உயற்பாலது பழியே-ஒழிதற்பான்மையது தீவினையே.
விளக்கம்:
('ஓரும்' என்பன இரண்டும் அசைநிலை. தேற்றேகாரம் பின்னும் கூட்டப்பட்டது. பழிக்கப்படுவதனைப் 'பழி' என்றார். இதனான் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒருவனுக்குச் செய்யும் பகுதியது அறமே; தப்பும் பகுதியது பழியே ,
(என்றவாறு). மேல் அறஞ் செய்யப் பிறப்பறு மென்றார்; அதனோடு பாவமுஞ் செய்யின் அறாதென்றற்கு இது கூறினார்.