குறள் 395

கல்வி

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்

utaiyaarmun illaarpol yaekkatrrung katrraar
kataiyarae kallaa thavar


Shuddhananda Bharati

Education

Like poor before rich they yearn:
For knowledge: the low never learn.


GU Pope

Learning

With soul submiss they stand, as paupers front a rich man's face;
Yet learned men are first; th'unlearned stand in lowest place.

The unlearned are inferior to the learned, before whom they stand begging, as the destitute beforethe wealthy.


Mu. Varadarajan

செல்வர்முன்‌ வறியவர்‌ நிற்பதுபோல்‌ (கற்றவர்முன்‌) ஏங்கித்‌ தாழ்ந்து நின்றும்‌ கல்வி கற்றவரே உயர்ந்தவர்‌; கல்லாதவர்‌ இழிந்தவர்‌.


Parimelalagar

உடையார்முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார் - 'பிற்றை நிலைமுனியாது கற்றல் நன்று' (புறநா. 183) ஆதலான், செல்வர்முன் நல்கூர்ந்தார் நிற்குமாறு போலத் தாமும் ஆசிரியர்முன் ஏக்கற்று நின்றும் கற்றார் தலையாயினார்; கல்லாதவர் கடையரே - அந்நிலைக்கு நாணிக் கல்லாதவர் எஞ்ஞான்றும் இழிந்தாரேயாவர்.
விளக்கம்:
('உடையார், இல்லார்' என்பன உலகவழக்கு. ஏக்கறுதல்; ஆசையால் தாழ்தல். கடையர்' என்றதனான், அதன் மறுதலைப் பெயர் வருவிக்கப்பட்டது. பொய்யாய மானம் நோக்க மெய்யாய கல்வி இழந்தார் பின் ஒரு ஞான்றும் அறிவுடைய ராகாமையின், 'கடையரே' என்றார். இதனால், கற்றாரது உயர்வும் கல்லாதாரது இழிவும் கூறப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) பொருளுடையார் முன்பு பொருளில்லாதார் நிற்குமாறு போல், அதனைக் காதலித்து நிற்றலுமன்றிக் கற்றாரிடத்தாவர் கல்லாதார்,
(என்றவாறு) இது கற்றார் எல்லாரினுந் தலையாவாரென்றது.