குறள் 393

கல்வி

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்

kannutaiyar yenpavar katrnor mukaththirandu
punnutaiyar kallaa thavar


Shuddhananda Bharati

Education

The learned alone have eyes on face
The ignorant two sores of disgrace.


GU Pope

Learning

Men who learning gain have eyes, men say;
Blockheads' faces pairs of sores display.

The learned are said to have eyes, but the unlearned have (merely) two sores in their face.


Mu. Varadarajan

கண்ணுடையவர்‌ என்று உயர்வாகக்‌ கூறப்படுகின்றவர்‌ கற்றவரே; கல்லாதவர்‌ முகத்தில்‌ இரண்டு புண்‌ உடையவர்‌ ஆவர்‌.


Parimelalagar

கண் உடையர் என்பவர் கற்றோர் - கண்ணுடையர் என்று உயர்த்துச் சொல்லப்படுவார் கற்றவரே; கல்லாதவர் முகத்து இரண்டு புண் உடையர் - மற்றைக் கல்லாதவர் முகத்தின்கண் இரண்டு புண்ணுடையர்; கண்ணிலர்.
விளக்கம்:
(தேயம் இடையிட்டவற்றையும் காலம் இடையிட்டவற்றையும் காணும் ஞானக்கண் உடைமையின், கற்றாரைக் 'கண்ணுடையர்' என்றும், அஃதின்றி நோய் முதலியவற்றால் துன்பம் செய்யும் ஊன்கண்ணே உடைமையின், கல்லாதவரைப் 'புண்ணுடையர்' என்றும் கூறினார். மேல் கண்ணன்மை உணரநின்ற ஊனக்கண்ணின் மெய்ம்மை கூறியவாற்றான், பொருள் நூல்களையும் கருவிநூல்களையும் கற்றாரது உயர்வும், கல்லாதாரது இழிவும் இதனான் தொகுத்துக் கூறப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) கற்றோர் கண்ணுடைய ரென்று சொல்லப்படுவர்; கல்லாதார் முகத்தின் கண்ணே இரண்டு புண்ணுடைய ரென்று சொல்லப்படுவர்,
(என்றவாறு). அறிவு கல்வியின் கண்ண தாகலான், அக்கல்வியில்லாதார் கண் புண்ணா யிற்று.