Kural 389
குறள் 389
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு
sevikaippach sotrporukkum panputai vaendhthan
kavikaikkeelth thangkum ulaku
Shuddhananda Bharati
Under his shelter thrives the world
Who bears remarks bitter and bold.
GU Pope
The king of worth, who can words bitter to his ear endure,
Beneath the shadow of his power the world abides secure.
The whole world will dwell under the umbrella of the king, who can bear words that embitter theear.
Mu. Varadarajan
குறைகூறுவோரின் சொற்களைச் செவி கைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பு உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.
Parimelalagar
சொல் செவி கைப்பப் பொறுக்கும் பண்பு உடைவேந்தன் - இடிக்கும் துணையாயினார் சொற்களைத் தன் செவி பொறாதாகவும். விளைவு நோக்கிப் பொறுக்கும் பண்புடைய அரசனது; கவிகைக்கீழ்த் தங்கும் உலகு - குடைநிழற் கண்ணே தங்கும் உலகம்.
விளக்கம்:
('செவி கைப்ப' என்றதற்கு ஏற்ப, 'இடிக்குந் துணையாயினார்' என்பது வருவிக்கப்பட்டது. நாவின் புலத்தைச் செவிமேல் ஏற்றிக் 'கைப்ப' என்றார். பண்பு உடைமை: விசேட உணர்வினனாதல். அறநீதிகளில் தவறாமையின், மண் முழுதும் தானே ஆளும் என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) தன் செவி வெறுக்கும்படியாகப் பிறர் செய்த குற்றங்களைக் கேட்டு வைத்தும், அதனைப் பொறுக்கவல்ல குணமுடைய வேந்தனது குடைக் கீழே உலகு தங்கும்,
(என்றவாறு) சொற் பொறுக்கும் என்பதற்குப் புரோகிதர் தன்னிடத்துச் சொல்லுஞ் சொற்களைப் பொறுக்கவல்ல என்பாருமுளர்.