குறள் 388

இறைமாட்சி

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்

muraiseithu kaappaatrrum mannavan makkatku
iraiyaenru vaikkap padum


Shuddhananda Bharati

The grandeur of monarchy

He is the Lord of men who does
Sound justice and saves his race.


GU Pope

The Greatness of a King

Who guards the realm and justice strict maintains,
That king as god o'er subject people reigns.

That king, will be esteemed a God among men, who performs his own duties, and protects (hissubjects).


Mu. Varadarajan

நீதிமுறை செய்து குடிமக்களைக்‌ காப்பாற்றும்‌ மன்னவன்‌, மக்களுக்குத்‌ தலைவன்‌ என்று தனியே கருதி மதிக்கப்படுவான்‌.


Parimelalagar

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் - தான் முறை செய்து பிறர் நலியாமற் காத்தலையும் செய்யும் அரசன்; மக்கட்கு இறை என்று வைக்கப்படும் - பிறப்பான் மகனேயாயினும், செய்வான் மக்கட்குக் கடவுள் என்று வேறு வைக்கப்படும்.
விளக்கம்:
(முறை: அறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறி. 'பிறர்' என்றது மேற்சொல்லியாரை. வேறு வைத்தல்: மக்களிற் பிரித்து உயர்த்து வைத்தல்.)


Manakkudavar

(இதன் பொருள்) குற்றஞ் செய்தாரை அதற்குச் செய்யும் முறைமை தப்பாமற் செய்து, எல்லாவுயிரையுங் காத்தலைச் செய்கின்ற அரசன், மனிதர்க்கு நாயக னென்று எண்ணப்படுவான்,
(என்றவாறு).