குறள் 386

இறைமாட்சி

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம

kaachik keliyan kadunjsollan allanael
meekkoorum mannan nilama


Shuddhananda Bharati

The grandeur of monarchy

That land prospers where the king is
Easy to see, not harsh of words.


GU Pope

The Greatness of a King

Where king is easy of access, where no harsh word repels,
That land's high praises every subject swells.

The whole world will exalt the country of the king who is easy of access, and who is free from harshlanguage.


Mu. Varadarajan

5காண்பதற்கு எளியவனாய்‌, கடுஞ்சொல்‌ கூறாதவனாய்‌ இருந்தால்‌, அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம்‌ புகழும்‌.


Parimelalagar

காட்சிக்கு எளியன் - முறை வேண்டினார்க்கும் குறை வேண்டினார்க்கும் காண்டற்கு எளியனாய்; கடுஞ்சொல்லன் அல்லனேல் - யாவர் மாட்டும் கடுஞ் சொல்லன் அல்லனும் ஆயின்; மன்னன் நிலம் மீக்கூறும் - அம்மன்னனது நிலத்தை எல்லா நிலங்களினும் உயர்த்துக் கூறும் உலகம்.
விளக்கம்:
(முறை வேண்டினார்: வலியரான் நலிவு எய்தினார். குறை வேண்டினார்: வறுமையுற்று இரந்தார். காண்டற்கு எளிமையாவது, பேர் அத்தாணிக்கண் அந்தணர் சான்றோர் உள்ளிட்டாரோடு செவ்வி உடையனாயிருத்த . கடுஞ்சொல்: கேள்வியினும் வினையினும் கடியவாய சொல். நிலத்தை மீக்கூறும் எனவே, மன்னனை மீக்கூறுதல் சொல்ல வேண்டாதாயிற்று. மீக்கூறுதல், 'இவன் காக்கின்ற நாடு பசி, பிணி, பகை முதலிய இன்றி யாவர்க்கும் பேரின்பம் தருதலின் தேவருலகினும் நன்று' என்றல். 'உலகம்' என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) காண்கைக்கு எளியனாய்க் கடுஞ்சொற்கூறுதலும் அல்லனாயின், அம்மன்னனை உலகத்தார் உயர்த்துக் கூறுவர்,
(என்றவாறு). இது மன்னன் உலகத்தார் மாட்டு ஒழுகுந் திறங் கூறிற்று.