Kural 383
குறள் 383
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு
thoongkaamai kalvi thunivutaimai immoonrum
neengkaa nilanaal pavarkku
Shuddhananda Bharati
Alertness, learning, bravery
Are adjuncts three of monarchy.
GU Pope
A sleepless promptitude, knowledge, decision strong:
These three for aye to rulers of the land belong.
These three things, viz., vigilance, learning, and bravery, should never be wanting in the ruler of acountry.
Mu. Varadarajan
காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை ஆகிய இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.
Parimelalagar
நிலன் ஆள்பவற்கு - நிலத்தினை ஆளும் திருவுடையாற்கு; தூங்காமை கல்வி துணிவு உடைமை இம்மூன்றும் நீங்கா - அக்காரியங்களில் விரைவுடைமையும், அவை அறிதற்கு ஏற்ற கல்வியுடைமையும், ஆண்மை உடைமையும் ஆகிய இம்மூன்று குணமும் ஒருகாலும் நீங்கா.
விளக்கம்:
(கல்வியது கூறுபாடு முன்னர்க் கூறப்படும். ஆண்மையாவது, ஒன்றனையும் பாராது கடிதில் செய்வது ஆகலின், அஃது ஈண்டு உபசார வழக்கால் 'துணிவு' எனப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. இவற்றுள் கல்வி, ஆறு அங்கத்திற்கும் உரித்து ஏனைய, வினைக்கு உரிய. 'நீங்கா' என்பதற்குமேல் எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க.)
Manakkudavar
(இதன் பொருள்) மடியின்மையும் கல்வியுடைமையும் ஒரு பொருளை ஆராய்ந்து துணிதலுடைமையும் என்று சொல்லப்பட்ட இம்மூன்றும் பூமியை யாள் பவனுக்கு நீங்காமல் வேண்டும், (எ – று).