Kural 381
குறள் 381
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு
pataikuti koolamaichsu natparan aarum
utaiyaan aracharul yaeru
Shuddhananda Bharati
People, troops, wealth, forts, council, friends
Who owns these six is lion of kings.
GU Pope
An army, people, wealth, a minister, friends, fort: six things-
Who owns them all, a lion lives amid the kings.
He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is alion among kings.
Mu. Varadarajan
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போன்றவன்.
Parimelalagar
படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் உடையான்-படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறு அங்கங்களையும் உடையவன்; அரசருள் ஏறு - அரசருள் ஏறு போல்வான்.
விளக்கம்:
(ஈண்டுக் 'குடி' என்றது, அதனை உடைய நாட்டினை; 'கூழ்' என்றது, அதற்கு ஏதுவாகிய பொருளை. அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு என்பதே முறையாயினும், ஈண்டுச் செய்யுள் நோக்கிப் பிறழ வைத்தார். 'ஆறும்' உடையான் என்றதனால், அவற்றுள் ஒன்று இல்வழியும் அரச நீதி செல்லாது என்பது பெற்றாம். வடநூலார் இவற்றிற்கு 'அங்கம்' எனப் பெயர் கொடுத்ததூஉம் அது நோக்கி. 'ஏறு' என்பது உபசார வழக்கு. இதனால் அரசற்கு அங்கமாவன இவை என்பதூஉம், இவை முற்றும் உடைமையே அவன் வெற்றிக்கு ஏது என்பதூஉம் கூறப்பட்டன.)
Manakkudavar
இதனுள், இறைமாட்சியாவது இறைவனது உண்மை கூறுதல். இவ் வதிகாரத்துள் உரைக்கின்ற பொருள் அரசரை நோக்கிற்றாதலானும் அரசன் மக்களிற் சிறந்தானாதலானும் இவ்வதிகா ரங் கூறப்பட்டது. (இதன் பொருள்) படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணுமென்னும் ஆறு பொருளினையும் உடையவன் அரசருள் ஏறுபோல்வான்,
(என்றவாறு). ஈண்டுக் குடியுள் நாடு அடங்கிற்று. இஃது அரசனுக்கு உண்டாகுவன கூறிற்று.