Kural 380
குறள் 380
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
oolitr paeruvali yaavula matrronru
koolinundh thaanmundh thurum
Shuddhananda Bharati
What power surpasses fate? Its will
Persists against the human skill.
GU Pope
What powers so great as those of Destiny? Man's skill
Some other thing contrives; but fate's beforehand still.
What is stronger than fate ? If we think of an expedient (to avert it), it will itself be with us before (the thought).
Mu. Varadarajan
ஊழைவிட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன? ஊழை விலக்கும் பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.
Parimelalagar
மற்று ஒன்று சூழினும் தான் முந்துறும் - தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும்; தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும்; ஊழின் பெருவலியா உள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாவை உள?
விளக்கம்:
('பெருவலி' ஆகுபெயர். சூழ்தல். பலருடனும் பழுதற எண்ணுதல். செய்தற்கே அன்றிச் சூழ்தற்கும் அவதிகொடாது என்றமையின், உம்மை எச்ச உம்மை. எல்லாம் வழியாக வருதலுடைமையின், ஊழே வலியது என்பதாம். இதனான் அவ்விருவகை ஊழின் வலியும் பொதுவாகக் கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) ஊழினும் மிக்க வலியுடையன யாவையுள்? பிறிதொன்றை யாராயுங் காலத்தும், தான் முற்பட அவ்வாராய்ச்சிக்கு உடன்பட்டு நிற்கும், (எ-று).