Kural 379
குறள் 379
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்
nanraangkaal nallavaak kaanpavar anraangkaal
allatr paduva thaevan
Shuddhananda Bharati
Who good in time of good perceive
In evil time why should they grieve?
GU Pope
When good things come, men view them all as gain;
When evils come, why then should they complain?
How is it that those, who are pleased with good fortune, trouble themselves when evil comes, (since both are equally the decree of fate) ?
Mu. Varadarajan
நல்வினை விளையும்போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றவர், தீவினை விளையும்போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ?
Parimelalagar
நன்று ஆங்கால் நல்லவாக் காண்பவர் - நல்வினை விளையுங்கால், அதன் விளைவாய இன்பங்களைத் துடைக்கும் திறன் நாடாது, 'இவை நல்ல' என்று இயைந்து அனுபவிப்பார்; அன்று ஆங்கால் அல்லற்படுவது எவன் - ஏனைத் தீவினை விளையுங்கால் அதன் விளைவாய துன்பங்களையும் அவ்வாறு அனுபவியாது, துடைக்கும் திறன் நாடி அல்லல் உழப்பது என் கருதி?
விளக்கம்:
(தாமே முன் செய்து கொண்டமையானும், ஊட்டாது கழியாமையானும், இரண்டும் இயைந்து அனுபவிக்கற்பால, அவற்றுள் ஒன்றிற்கு இயைந்து அனுபவித்து, ஏனையதற்கு அது செய்யாது வருந்துதல் அறிவன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் இன்பத் துன்பங்கட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) நன்மைவருங்காலத்து நன்றாகக் காண்பவர் தீமைவருங்காலத்து அல்லற்படுவது யாதினுக்கு?
(என்றவாறு) இஃது அறிந்தவர் வருவனவெல்லாம் இயல்பென்று கொள்ளவேண்டும் மென்றது.