குறள் 378

ஊழ்

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்

thurappaarman thuppura villaar uratrpaala
oottaa kaliyu maenin


Shuddhananda Bharati

Destiny

The destitute desire will quit
If fate with ills visit them not.


GU Pope

Fate

The destitute with ascetics merit share,
If fate to visit with predestined ills would spare.

The destitute will renounce desire (and become ascetics), if (fate) do not make them suffer the hindrances to which they are liable, and they pass away.


Mu. Varadarajan

வரவேண்டிய துன்பங்கள்‌ வந்து வருத்தாமல்‌ நீங்குமானால்‌, நுகரும்‌ பொருள்‌ இல்லாத வறியவர்‌ துறவறம்‌ மேற்கொள்வர்‌.


Parimelalagar

துப்புரவு இல்லார் துறப்பார் - வறுமையான் நுகர்ச்சி இல்லாதார் துறக்கும் கருத்துடையராவர்; உறற்பால ஊட்டா கழியும் எனின் - ஊழ்கள் உறுதற்பாலவாய துன்பங்களை உறுவியாது ஒழியுமாயின்.
விளக்கம்:
('துறப்பார்' என்பது ஆர்ஈற்று எதிர்கால முற்றுச்சொல். தம்மால் விடப்பெறுவன தாமே விடப்பெற்று வைத்தும், கருத்து வேறுபாட்டால் துன்பமுறுகின்றது ஊழின் வலியான் என்பது எஞ்சி நிற்றலின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.)


Manakkudavar

(இதன் பொருள்) நுகரும்பொரு ளில்லாதார் துறக்கவமைவர்; தமக்கு வந்துறுந் துன்பப்பகுதியானவை உறாது போமாயின்,
(என்றவாறு) இது துறவறமானது ஊழினால் வருமென்றது.