குறள் 377

ஊழ்

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது

vakuththaan vakuththa vakaiyallaal koati
thokuththaarkku thuiththal arithu


Shuddhananda Bharati

Destiny

Who crores amass enjoy but what
The Dispenser's decrees allot.


GU Pope

Fate

Save as the 'sharer' shares to each in due degree,
To those who millions store enjoyment scarce can be.

Even those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things).


Mu. Varadarajan

ஊழ்‌ ஏற்படுத்திய வகையால்‌ அல்லாமல்‌ முயன்று கோடிக்கணக்கான பொருள்களைச்‌ சேர்த்தவர்க்கும்‌ அவற்றை நுகர முடியாது.


Parimelalagar

கோடி தொகுத்தார்க்கும் - ஐம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும்; வகுத்தான் வகுத்த வகையல்லா துய்த்தல் அரிது - தெய்வம் வகுத்த வகையான அல்லது நுகர்தல் உண்டாகாது.
விளக்கம்:
(ஓர் உயிர் செய்த வினையின் பயன் பிறிதோர் உயிரின்கண் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின் 'வகுத்தான்' என்றார். "இசைத்தலும் உரிய வேறிடத்தான்" (தொல். சொல். 59) என்பதனான் உயர்திணையாயிற்று. படையாதார்க்கேயன்றிப் படைத்தார்க்கும் என்றமையால், 'உம்மை' எச்ச உம்மை. வெறு முயற்சிகளாற் பொருள்களைப் படைத்தல் அல்லது நுகர்தல் ஆகாது, அதற்கு ஊழ் வேண்டும் என்பதாயிற்று.)


Manakkudavar

(இதன் பொருள்) விதானம் பண்ணினவன் விதானம் பண்ணின வகையினால் லது, கோடிபொருளை யீட்டினவர்க்கும் அதனால் வரும் பயன்கோடல் அருமை யுடைத்து,
(என்றவாறு). இது பொருள் பெற்றாலும் நுகர்தற்கு ஊழ்வேண்டுமென்றது.