குறள் 372

ஊழ்

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை

paethaip padukkum ilavool arivakatrrum
aakalool utrrak katai


Shuddhananda Bharati

Destiny

Loss-fate makes a dull fool of us
Gain-fate makes us prosperous, wise!


GU Pope

Fate

The fate that loss ordains makes wise men's wisdom foolishness;
The fate that gain bestows with ampler powers will wisdom bless.

An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge.


Mu. Varadarajan

பொருள்‌ இழத்தற்குக்‌ காரணமான ஊழ்‌, பேதை யாக்கும்‌; பொருள்‌ ஆவதற்குக்‌ காரணமான ஊழ்‌ அறிவைப்‌ பெருக்கும்‌.


Parimelalagar

இழவு ஊழ் (உற்றக்கடை) அறிவு பேதைப் படுக்கும் - ஒருவனுக்கு எல்லா அறிவும் உளவாயினும், கைப்பொருள் இழத்தற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து, அஃது அதனைப் பேதையாக்கும்; ஆகல் ஊழ் உற்றக்கடை அகற்றும் - இனி அவன் அறிவு சுருங்கியிருப்பினும், கைப்பொருளாதற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து அஃது அதனை வரிக்கும்.
விளக்கம்:
('கைப்பொருள்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'இழவு ஊழ்', 'ஆகல் ஊழ்' என்பன இரண்டும் வேற்றுமைத் தொகை. 'உற்றக்கடை' என்பது முன்னும் கூட்டப்பட்டது. இயற்கையானாகிய அறிவையும் வேறுபடுக்கும் என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) கெடுக்கும் ஊழ் தோன்றினால் அறியாமையை யுண்டாக்கும்; ஆக்கும் ஊழ் தோன்றினால் அறிவை விரிக்கும்,
(என்றவாறு) இஃது அறிவும் அறியாமையும் ஊழால் வருமென்றது.