குறள் 371

ஊழ்

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி

aakoolaal thonrum asaivinmai kaipporul
pokoolaal thonrum mati


Shuddhananda Bharati

Destiny

Efforts succeed by waxing star
Wealth-losing brings waning star.


GU Pope

Fate

Wealth-giving fate power of unflinching effort brings;
From fate that takes away idle remissness springs.

Perseverance comes from a prosperous fate, and idleness from an adverse fate.


Mu. Varadarajan

கைப்பொருள்‌ ஆவதற்குக்‌ காரணமான ஊழால்‌ சோர்வில்லாத முயற்சி உண்டாகும்‌; கைப்பொருள்‌ போவதற்குக்‌ காரணமான ஊழால்‌ சோம்பல்‌ ஏற்படும்‌.


Parimelalagar

கை பொருள் ஆகுஊழால் அசைவு இன்மை தோன்றும் - ஒருவற்குக் கைப்பொருளாதற்குக் காரணமாகிய ஊழான் முயற்சி உண்டாம்; போகு ஊழால் மடி தோன்றும் - அஃது அழிதற்குக் காரணமாகிய ஊழான் மடி உண்டாம்.
விளக்கம்:
('ஆகூழ்!' 'போகூழ்' என்னும் வினைத்தொகைகள் எதிர்காலத்தான் விரிக்கப்பட்டுக் காரணப்பொருளவாய் நின்றன. அசைவு-மடி. பொருளின் ஆக்க அழிவுகட்குத் துணைக்காரணமாகிய முயற்சி மடிகளையும் தானே தோற்றுவிக்கும் என்பது கருத்து.)


Manakkudavar

ஊழாவது முன்பு செய்த வினை பின்பு விளையும் முறை. மேற்கூறிய அறப் பகுதியும் இனிக் கூறுகின்ற பொருட் பகுதியும். இன்பப் பகுதியும் முன் செய்த நல்வினையால் வருதலையும், இவற்றிற்கு மாறான பாவமும் வறுமையும் துன்பமும் தீவினையால் வருதலையும் அறியாதே அவை உலகத்தில் மக்கள் பலர் தமது முயற்சி யால் வந்தனவென்பரன்றே? அதற்காக இது கூறப்பட்டது. ஒருவன் செய்த வினை தனது பயனை வழுவின்றிப் பயத்தல் அறத்தினாகுமாதலான், இஃது அறத்தினிறுதிக்கண் கூறப்பட்டது. (இதன் பொருள்) ஒருவனுக்கு ஆக்கங் கொடுக்கின்ற ஊழ் தோற்றினால் முயற்சி தோன்றும்; அழிவு கொடுக்கின்ற ஊழ் தோற்றினால் மடி தோன்றும்,
(என்றவாறு). இஃது ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் ஏதுவான முயற்சியும் முயலாமையும் ஊழால் வருமென்றது.