குறள் 37

அறன்வலியுறுத்தல்

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

araththaaru ithuvaena vaentaa sivikai
poruththaanodu oorndhthaan itai


Shuddhananda Bharati

The power of virtue

Litter-bearer and rider say
Without a word, the fortune's way.


GU Pope

Assertion of the Strength of Virtue

Needs not in words to dwell on virtue's fruits: compare
The man in litter borne with them that toiling bear!

The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palanquin and the rider therein.


Mu. Varadarajan

பல்லக்கைச்‌ சுமப்பவனும்‌ அதன்‌ மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின்‌ பயன்‌ இஃது என்று கூறவேண்டா.


Parimelalagar

அறுத்து ஆறு இது என வேண்டா-அறத்தின் பயன் இது என்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா; சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை-சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும்.
விளக்கம்:
(பயனை 'ஆறு' என்றார். பின்னது ஆகலின். 'என' என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், 'பொறுத்தானோடு ஊர்ந்தானிடை' என்றதனால் காட்சியளவையும் பெற்றாம். 'உணரப்படும்' என்பது சொல்லெச்சம். இதனான் அறம் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) நீங்கள் அறநெறி யித்தன்மைத்தென் றறிய வேண்டா , சிவி யைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காணலாம்,
(என்றவாறு). இது பொன்றினாலுந் துணையாகுமோ என்றார்க்குத் துணையாயினவாறு காட்டிற்று.