குறள் 36

அறன்வலியுறுத்தல்

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை

anrarivaam yennaathu aranjseika matrrathu
ponrungkaal ponraath thunai


Shuddhananda Bharati

The power of virtue

Do good enow; defer it not
A deathless aid in death if sought.


GU Pope

Assertion of the Strength of Virtue

Do deeds of virtue now. Say not, 'To-morrow we'll be wise';
Thus, when thou diest, shalt thou find a help that never dies.

Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend.


Mu. Varadarajan

இளைஞராக உள்ளவர்‌ பிற்காலத்தில்‌ பார்த்துக்‌ கொள்ளலாம்‌ என்று எண்ணாமல்‌ அறம்‌ செய்யவேண்டும்‌. அதுவே உடல்‌ அழியும்‌ காலத்தில்‌ அழியாத்‌ துணையாகும்‌.


Parimelalagar

அன்று அறிவாம் என்னாது அறம் செய்க- 'யாம் இது பொழுது இளையம் ஆகலின் இறக்கும் ஞான்று செய்தும்' எனக் கருதாது அறத்தினை நாள்தோறும் செய்க; அது பொன்றுங்கால் பொன்றாத் துணை-அவ்வாறு செய்த அறம் உடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவு இல்லாத துணை ஆம்.
விளக்கம்:
('மற்று' என்பது அசைநிலை. 'பொன்றாத் துணை' என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின். இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையினபொழுதே செய்க என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க, அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்குமிடத்திற்குத் துணையாம். இஃது அறஞ் செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டுமென்பதும் அது மறு மைக்குத் துணையாமென்பதும் கூறிற்று.