குறள் 35

அறன்வலியுறுத்தல்

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

alukkaaru avaavaekuli innaachsol naankum
ilukkaa iyanrathu aram


Shuddhananda Bharati

The power of virtue

Four ills eschew and virtue reach,
Lust, anger, envy, evil-speech.


GU Pope

Assertion of the Strength of Virtue

'Tis virtue when, his footsteps sliding not through envy, wrath,
Lust, evil speech-these four, man onwards moves in ordered path.

That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech.


Mu. Varadarajan

பொறாமை, ஆசை, சினம்‌, கடுஞ்சொல்‌ ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும்‌ இடங்கொடுக்காமல்‌ அவற்றைக்‌ கடிந்து ஒழுகுவதே அறமாகும்‌.


Parimelalagar

அழுக்காறு-பிறர் ஆக்கம் பொறாமையும்; அவா புலன்கள்மேல் செல்கின்ற அவாவும்; வெகுளி-அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் வெகுளியும்; இன்னாச்சொல்-அதுபற்றி வரும் கடுஞ்சொல்லும் ஆகிய; நான்கும் இழுக்கா இயன்றது அறம்-இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறம் ஆவது.
விளக்கம்:
(இதனான், இவற்றோடு விரவி இயன்றது அறம் எனப்படாது என்பதூஉம் கொள்க. இவை இரண்டு பாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) மனக்கோட்டமும், ஆசையும், வெகுளியும், கடுஞ் சொல்லும் என்னும் நான்கினையும் ஒழித்து நடக்குமது யாதொன்று அஃது அறமென்று சொல்லப்படும், (எ - று.)பின்னர்ச் செய்யலாகாதென்று கூறுவனவெல்லாம் இந்நான்கினுள் அடங்கு மென்று கூறிய அறம் எத்தன்மைதான்றற்கு இது கூறப்பட்டது.