குறள் 351

மெய்யுணர்தல்

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு

porulalla vatrraip porulaenru unarum
marulaanaam maanaap pirappu


Shuddhananda Bharati

Truth consciousness

That error entails ignoble birth
Which deems vain things as things of worth.


GU Pope

Knowledge of the True

Of things devoid of truth as real things men deem;-
Cause of degraded birth the fond delusive dream!

Inglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real.


Mu. Varadarajan

மெய்ப்பொருள்‌ அல்லாதவைகளை மெய்ப்பொருள்‌ என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால்‌ சிறப்பில்லாத துன்பப்பிறவி உண்டாகும்‌.


Parimelalagar

பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான் ஆம் - மெய்ப்பொருள் அல்லவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வானே உளதாம்; மாணாப் பிறப்பு - இன்பம் இல்லாத பிறப்பு.
விளக்கம்:
(அவ் விபரீத உணர்வாவது, மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளும் இல்லை எனவும், மெய்ந்நூல் வழக்கு எனத் துணிதல். குற்றியை மகன் என்றும் இப்பியை வெள்ளி என்றும் இவ்வாறே ஒன்றனைப் பிறிதொன்றாகத் துணிதலும் அது. 'மருள், மயக்கம், விபரீத உணர்வு, அவிச்சை' என்பன ஒருபொருட் கிளவி. நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப் பிறப்பினும் உள்ளது துன்பமே ஆகலின், 'மாணாப் பிறப்பு' என்றார். இதனால், பிறப்புத் துன்பம் என்பதூஉம், அதற்கு முதற்காரணம் அவிச்சை என்பதூஉம் கூறப்பட்டன.)


Manakkudavar

மெய்யுணர்தலாவது எக்காலத்தினும் எவ்விடத்திலும் அழியாது நிற்கும் பொருள் இதுவென வுணர்தல். இது பற்றறத் துறந்தாரது உள்ள நிகழ்ச்சியாத லான், அதன்பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத் தினாலே உண்டாம்; மாட்சிமையில்லாத பிறப்பு,
(என்றவாறு). இது மெய்யுணருங்கால் மயக்கங் காண்பனாயின், பிறப்புண்டாமென்றது.