குறள் 340

நிலையாமை

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு

pukkil amaindhthinru kollo udampinul
thuchil irundhtha uyirkku


Shuddhananda Bharati

Instability

The life berthed in this body shows
A fixed home it never knows.


GU Pope

Instability

The soul in fragile shed as lodger courts repose:-
Is it because no home's conclusive rest it knows?

It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home.


Mu. Varadarajan

(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில்‌ ஒரு மூலையில்‌ குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப்‌ புகுந்திருக்கும்‌ வீடு இதுவரையில்‌ அமையவில்லையோ?


Parimelalagar

உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு - வாதம் முதலியவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போந்த உயிர்க்கு; புக்கில் அமைந்தின்று கொல் - எஞ்ஞான்றும் இருப்பதோர் இல் இதுகாறும் அமைந்ததில்லை போலும்!
விளக்கம்:
(அந்நோய்கள் இருக்க அமைந்த ஞான்று இருந்தும், வெகுண்ட ஞான்று போயும் ஓர் உடம்பினும் நிலைபெறாது வருதலால், 'துச்சில் இருந்த' என்றார். பின் புறப்படாது புக்கேவிடும் இல் அமைந்ததாயின், பிறர் இல்களுல் துச்சிலிராது என்பதாம்; ஆகவே, உயிரோடு கூடி நிற்பதோர் உடம்பும் இல்லை என்பது பெறப்பட்டது. இவை ஏது பாட்டானும், முறையே யாக்கைகட்கு வரைந்த நாள் கழிகின்றவாறும், கழிந்தால் உளதாய நிலையாமையும, அவை ஓரோவழிப் பிறந்த அளவிலே இறத்தலும், ஒரு கணமாயினும் நிற்கும் என்பது தெளியப்படாமையும், உயிர் நீங்கிய வழிக் கிடக்குமாறும், அவற்றிற்கு இறப்பும் பிறப்பும் மாறிமாறி வருமாறும், அவைதாம் உயிர்க்குரிய அன்மையும் என்று, இவ்வாற்றால் யாக்கை நிலையாமை கூறியவாறு கண்டு கொள்க.)


Manakkudavar

(இதன் பொருள்) தனதல்லாத உடம்பினுள்ளே ஒதுக்குக்குடியாக விருந்த உயிர்க்குப் போயிருப்பதற்கிடம் அமைந்ததில்லையோ? அமைந்ததாயின், இதனுள் இராது. புக்கில் என்பது முத்தி ஸ்தானம். இது மேற்கூறியவற்றால் உயிர் மாறிப் பிறந்து வரினும் ஓரிடத்தே தவறுமென்பது கூறிற்று.