Kural 341
குறள் 341
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
yaathanin yaathanin neengkiyaan nothal
athanin athanin ilan
Shuddhananda Bharati
From what from what a man is free
From that, from that his torments flee.
GU Pope
From whatever, aye, whatever, man gets free,
From what, aye, from that, no more of pain hath he!
Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain.
Mu. Varadarajan
ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
Parimelalagar
யாதனின் யாதனின் நீங்கியான் - ஒருவன் யாதொரு பொருளின் யாதொரு பொருளின் நீங்கினான்; அதனின் அதனின் நோதல் இலன் - அவன் அப்பொருளால் அப்பொருளால் துன்பம் எய்துதல் இலன்.
விளக்கம்:
(அடுக்குகள் பன்மை குறித்து நின்றன. நீக்குதல் - துறத்தல். ஈண்டத் துன்பம் என்றது இம்மைக்கண் அவற்றைத் தேடுதலானும், காத்தலானும், இழத்தலானும் வருவனவும், மறுமைக்கண் பாவத்தான் வருவனவும் ஆய இருவகைத் துன்பங்களையும் ஆம். எல்லாப் பொருளையும் ஒருங்கே விடுதல் தலைமை; அஃதன்றி, ஒரொ ஒன்றாக விடினும் அவற்றான் வரும் துன்பம் இலனாம் என்பது கருத்து.)
Manakkudavar
துறவாவது ஒருவன் தவம்பண்ணா நின்ற காலத்து யாதாயினும் ஒரு தொடர்ப்பாடு உளதாயினும், அதனைப்பற்றறத் துறத்தல். இது மயக்கமற்றார்க்கு வருவதொன்றா-தலின், அதன்பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) எவன் யாதொன்றினின்றும் யாதொன்றினின்றும் நீங்கினான் . அவன் அதனளவு அதனளவு துன்பமுறுதலிலன்,
(என்றவாறு).