குறள் 342

துறவு

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல

vaentinun taakath thurakka thurandhthapin
eenduiyatr paala pala


Shuddhananda Bharati

Renunciation

Give up all to gain the True
And endless joys shall hence seek you.


GU Pope

Renunciation

'Renunciation' made- ev'n here true pleasures men acquire;
'Renounce' while time is yet, if to those pleasures you aspire.

After a man has renounced (all things), there will still be many things in this world (which he may enjoy); if he should desire them, let him, while it is time abandon. (the world).


Mu. Varadarajan

துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால்‌, எல்லாப்‌ பொருள்களும்‌ உள்ள காலத்திலேயே துறக்க வேண்டும. துறந்தபின்‌ இங்குப்‌ பெறக்கூடும்‌ இன்பங்கள்‌ பல.


Parimelalagar

துறந்த பின் ஈண்டு, இயற்பால பல - எல்லாப் பொருள்களையும் துறந்தால், ஒருவர்க்கு இம்மைக்கண்ணே உளவாம் முறைமையை உடைய இன்பங்கள் பல; வேண்டின் உண்டாகத் துறக்க - அவ் இன்பங்களை வேண்டின், அவற்றைக் காலம் பெறத் துறக்க.
விளக்கம்:
(அவ்வின்பங்களாவன, அப்பொருள்கள் காரணமாக மனம், மொழி, மெய்கள் அலையாது நிற்றலானும், அவை நன்னெறிக்கண் சேறலானும் வருவன.இளமைக்கண் துறந்தான் அவற்றை நெடுங்காலம் எய்துமாகலின், 'உண்டாகத் துறக்க' என்றார். இன்பங்கள் என்பதும் காலம் என்பதும் வருவிக்கப்பட்டன. இம்மைக் கண் துன்பங்கள் இல்லாதலேயன்றி இன்பங்கள் உளவாதலும் உண்டு என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) தன்னுயிர்க்கு ஆக்கம் உண்டாக வேண்டின், தன்னுடைமை யெல்லாவற்றையுந் துறக்க; துறந்தபின் இவ்விடத்தே யியலும் பகுதியின் பல. இஃது இம்மைப் பயன் கூறிற்று.