குறள் 343

துறவு

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு

adalvaendum aindhthan pulaththai vidalvaendum
vaentiya vaellaam orungku


Shuddhananda Bharati

Renunciation

Curb the senses five and renounce
The craving desires all at once.


GU Pope

Renunciation

'Perceptions of the five' must all expire;-
Relinquished in its order each desire

Let the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desired.


Mu. Varadarajan

ஐம்பொறிகளுக்கு உரிய ஐந்து புலன்களின்‌ ஆசையையும்‌ வெல்லுதல்‌ வேண்டும்‌. அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம்‌ ஒரு சேர விடல்‌ வேண்டும்‌.


Parimelalagar

ஐந்தன் புலத்தை அடல் வேண்டும் - வீடு எய்துவார்க்குச் செவி முதலிய ஐம்பொறிகட்கு உரியவாய ஓசை முதலிய ஐம்புலன்களையும் கெடுத்தல் வேண்டும்; வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும் - கெடுக்குங்கால் அவற்றை நுகர்தற்பொருட்டுத் தாம் படைத்த பொருள் முழுவதையும் ஒருங்கே விடுதல் வேண்டும்.
விளக்கம்:
('புலம்' என்றது, அவற்றை நுகர்தலை. அது மனத்தைத் துன்பத்தானும் பாவத்தானும் அன்றி வாராத பொருள்கள் மேலல்லது வீட்டுநெறியாகிய யோகஞானங்களில் செலுத்தாமையின், அதனை 'அடல் வேண்டும்' என்றும், அஃது அப்பொருள்கள்மேல் செல்லின் அந்நுகர்ச்சி விறகுபெற்ற தழல்போல் முறுகுவதல்லது அடப்படாமையின், 'வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும்' என்றும் கூறினார்.)


Manakkudavar

(இதன் பொருள்) துறப்பார்க்குப் பொறிக ளைந்தினுக்கும் நுகர்ச்சியான ஐந்தினை யுங் கொல்லுதல் வேண்டும்; அதற்காகத் தாம் விரும்பின வெல்லாவற்றையும் ஒருகாலத்திலே விடுதல் வேண்டும்,
(என்றவாறு).