குறள் 344

துறவு

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து

iyalpaakum nonpitrkonru inmai utaimai
mayalaakum matrrum paeyarththu


Shuddhananda Bharati

Renunciation

To have nothing is law of vows
Having the least deludes and snares.


GU Pope

Renunciation

'Privation absolute' is penance true;
'Possession' brings bewilderment anew.

To be altogether destitute is the proper condition of those who perform austerities; if they possess anything, it will change (their resolution) and bring them back to their confused state.


Mu. Varadarajan

தவம்‌ செய்வதற்கு ஒரு பற்றும்‌ இல்லாதிருத்தல்‌ இயல்பாகும்‌; பற்று உடையவராக இருத்தல்‌ மீண்டும்‌ மயங்குதற்கு வழியாகும்‌.


Parimelalagar

ஒன்று இன்மை நோன்பிற்கு இயல்பு ஆகும் - பற்றப்படுவதொரு பொருளும் இல்லாமை தவம் செய்வார்க்கு இயல்பாம்; உடைமை பெயர்த்து மற்றும் மயல் ஆகும் - அஃதன்றி, ஒன்றாயினும் உடைமை அத்தவத்தைப் போக்குதலான், மீண்டும் மயக்குவதற்கு ஏதுவாம்.
விளக்கம்:
(இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'நோன்பு' என்பதூஉம், 'மயல்' என்பதூஉம் ஆகுபெயர். 'பெயர்த்தலான்' என்பது திரிந்து நின்றது. 'நோன்பைப் பெயர்த்தலான்' என வேற்றுமைப்படுத்துக் கூட்டுக. எல்லாப் பொருள்களையும் விட்டு ஒரு பொருளை விடாதவழியும், அது சார்பாக விட்டன எல்லாம் மீண்டும் வந்து தவத்திற்கு இடையீடாய் மனக்கலக்கம் செய்யும் என்பது கருத்து. இவை நான்கு பாட்டானும் 'எனது' என்னும் புறப்பற்று விடுதல் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) யாதொரு பொருளும் இலதாதல் தவத்திற்கியல்பாகும் ; பொரு ளுடைமை மீண்டும் பிறத்தற்குக் காரணமான மயக்கத்தைத் தரும்,
(என்றவாறு).