Kural 339
குறள் 339
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
urangku vathupolunj saakkaadu urangki
vilippathu polum pirappu
Shuddhananda Bharati
Death is like a slumber deep
And birth like waking from that sleep.
GU Pope
Death is sinking into slumbers deep;
Birth again is waking out of sleep.
Death is like sleep; birth is like awaking from it.
Mu. Varadarajan
இறப்பு எனப்படுவது ஒருவனுக்கு உறக்கம் வருதலைப் போன்றது; பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.
Parimelalagar
சாக்காடு உறங்குவது போலும் - ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும்; பிறப்பு உறங்கி விழிப்பது போலும் -அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோடு 'ஒக்கும்.
விளக்கம்:
(உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வருகின்றாற் போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வரும் என்பது கருத்து. நிலையாமையே நிலைபெற்றவாறு அறிவித்தற்குப் பிறப்பும் உடன் கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) உறங்குவதனோடு ஒக்கும் சாக்காடு ; உறங்கி விழிப்பதனோடு ஒக் கும் பிறப்பு,
(என்றவாறு). இது போன உயிர் மீண்டும் பிறக்கு மென்பதூஉம், இறத்தலும் பிறத்தலும் உறங்குதலும் விழித்தலும் போல மாறிவருமென்பதூஉம் கூறிற்று.