குறள் 333

நிலையாமை

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்

atrkaa iyalpitrruch selvam athupaetrraal
atrkupa aangkae seyal


Shuddhananda Bharati

Instability

Wealth wanes away; but when it comes
Take care to do enduring things.


GU Pope

Instability

Unenduring is all wealth; if you wealth enjoy,
Enduring works in working wealth straightway employ.

Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable.


Mu. Varadarajan

செல்வம்‌ நிலைக்காத இயல்பை உடையது; அத்தகைய செல்வத்தைப்‌ பெற்றால்‌, பெற்ற அப்பொழுதே நிலையான அறங்களைச்‌ செய்ய வேண்டும்‌.


Parimelalagar

அற்கா இயல்பிற்றுச் செல்வம் - நில்லாத இயல்பினையுடையப்துச் செல்வம்; அது பெற்றால் அற்குப ஆங்கே செயல் - அதனைப் பெற்றால் அதனால் செய்யப்படும் அறங்களை அப் பெற்ற பொழுதே செய்க.
விளக்கம்:
('அல்கா' என்பது திரிந்து நின்றது. ஊழ் உள்வழியல்லது துறந்தாரால் பெறப்படாமையின், 'அது பெற்றால்' என்றும், அஃது இல்வழி நில்லாமையின் 'ஆங்கே' என்றும் கூறினார். அதனால் செய்யப்படும் அறங்களாவன: பயன் நோக்காது செய்யப்படும் கடவுட்பூசையும், தானமும் முதலாயின. அவை ஞான ஏதுவாய் வீடு பயத்தலின், அவற்றை 'அல்குப' என்றும் 'செயல்' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செல்வம் நிலையாமை கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) நில்லாத வியல்பை புடைத்துச் செல்வம், அதனைப் பெற்றால், அப்பொழுதே நிற்பனவாகிய அறங்களைச் செய்க,
(என்றவாறு) நிலையாமை மூன்று வகைப்படும்; செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை என.