குறள் 332

நிலையாமை

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று

kooththaatdu avaikkulaath thatrrae paerunjselvam
pokkum athuvilindh thatrru


Shuddhananda Bharati

Instability

Like a drama-crowd wealth gathers
Like passing show its pride too goes.


GU Pope

Instability

As crowds round dancers fill the hall, is wealth's increase;
Its loss, as throngs dispersing, when the dances cease.

The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly.


Mu. Varadarajan

பெரிய செல்வம்‌ வந்து சேர்தல்‌, கூத்தாடுமிடத்தில்‌ கூட்டம்‌ சேர்வதைப்‌ போன்றது; அது நீங்கிப்‌ போதலும்‌ கூத்து முடிந்ததும்‌ கூட்டம்‌ கலைவதைப்‌ போன்றது.


Parimelalagar

பெருஞ்செல்வம் கூத்தாட்டு அவைக்குழாத்தற்று - ஒருவன் மாட்டுப் பெரிய செல்வம் வருதல் கூத்தாடுதல் செய்கின்ற அரங்கின்கண் காண்போர் குழாம் வந்தாற் போலும்; போக்கும் அது விளிந்தற்று - அதனது போக்கும் அக்கூத்தாட்டு முடிந்தவழி அக்குழாம் போயினாற்போலும்.
விளக்கம்:
(பெருஞ்செல்வம் எனவே, துறக்கச் செல்வமும் அடங்கிற்று. 'போக்கும்' என்ற எச்சஉம்மையான்வருதல் பெற்றாம்; அக்குழாம் கூத்தாட்டுக் காரணமாக அரங்கின்கண் பலதிறத்தால் தானே வந்து, அக்காரணம் போயவழித்தானும் போமாறுபோல, செல்வமும் ஒருவன் நல்வினை காரணமாக அவன்மாட்டுப் பல்திறத்தால் தானே வந்து அக்காரணம் போயவழித் தானும் போம் என்றதாயிற்று.)


Manakkudavar

(இதன் பொருள்) கூத்தாட்டுக் காண்டற்கு அவைக் கூட்டம் திரண்டா லொக் கும் பெருஞ்செல்வத் திரளும்; அந்த அவை யெழுந்து போனாற் போலும் அது போமாறும்,
(என்றவாறு).