குறள் 331

நிலையாமை

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை

nillaatha vatrrai nilaiyina yenrunarum
pullari vaanmai katai


Shuddhananda Bharati

Instability

The worst of follies it is told
The fleeting as lasting to hold.


GU Pope

Instability

Lowest and meanest lore, that bids men trust secure,
In things that pass away, as things that shall endure!

That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise).


Mu. Varadarajan

நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும்‌ புல்லறிவு உடையவராக இருத்தல்‌ வாழ்க்கையில்‌ இழிந்த நிலையாகும்‌.


Parimelalagar

நில்லாதவற்றை நிலையின் என்று உணரும் புல்லறிவு ஆண்மை - நிலையுதல் இலவாகிய பொருள்களை நிலையுதல் உடைய என்று கருதுகின்ற புல்லிய அறிவினை உடையராதல்; கடை - துறந்தார்க்கு இழிபு.
விளக்கம்:
(தோற்றம் உடையவற்றைக் கேடில என்று கருதும் புல்லறிவால் அவற்றின்மேல் பற்றுச் செய்தல் பிறவித்துன்பத்திற்கு ஏதுவாகலின், அது வீடு எய்துவார்க்கு இழுக்கு என்பது இதனால் கூறப்பட்டது. இனி, புல்லறிவாளர் பெரும்பான்மையும் பற்றுச்செய்வது சிற்றின்பத்துக்கு ஏதுவாகிய செல்வத்தின் கண்ணும்,அதனை அனுபவிக்கும் யாக்கையின் கண்ணும் ஆகலின், வருகின்ற பாட்டுகளான் அவற்றது நிலையாமையை விதந்து கூறுப.)


Manakkudavar

நிலையாமையாவது மயக்கத்தினால் தானென்று நினைத்திருக்கின்ற யாக்கை யும் தனதென்று நினைத்திருக்கின்ற பொருளும் நிலை நில்லாமையைக் கூறல். (இதன் பொருள்)நில்லாத பொருள்களை நிலைநிற்பன வென்று நினைக்கின்ற புல்லிய வறிவுடைமை இழிந்தது,
(என்றவாறு). எனவே, பொருள்களை புள்ளவாறு காணவொட்டாத மயக்கத்தைக் கடிய வேண்டுமென்றவாறாயிற்று.