குறள் 330

கொல்லாமை

உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்

uyirudampin neekkiyaar yenpa seyirudampin
sellaaththee vaalkkai yavar


Shuddhananda Bharati

Non

The loathsome poor sickly and sore
Are killers stained by blood before


GU Pope

Not killing

Who lead a loathed life in bodies sorely pained,
Are men, the wise declare, by guilt of slaughter stained.

(The wise) will say that men of diseased bodies, who live in degradation and in poverty, are those who separated the life from the body of animals (in a former birth).


Mu. Varadarajan

நோய்‌ மிகுந்த உடம்புடன்‌ வறுமையான தீய வாழ்க்கை உடையவர்‌, முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளிலிருந்து நீக்கினவர்‌ என்று அறிஞர்‌ கூறுவர்‌.


Parimelalagar

செயிர் உடம்பின் செல்லாத் தீ வாழ்க்கையவர் - நோக்கலாகா நோய் உடம்புடனே வறுமை கூர்ந்த இழி தொழில் வாழ்க்கையினை உடையாரை; உயிர் உடம்பின் நீக்கியார் என்ப - இவர் முற்பிறப்பின் கண் உயிர்களை அவை நின்ற உடம்பினின்றும் நீக்கினவர்' என்று சொல்லுவர் வினை விளைவுகளை' அறிந்தோர்.
விளக்கம்:
('செல்லா வாழ்க்கை, தீ வாழ்க்கை' எனக் கூட்டுக. செயிர் உடம்பினராதல், 'அக்கே போல் அங்கை யொழிய விரல் அழுகித் - துக்கத் தொழு நோய் எழுபவே' (நாலடி 123) என்பதனாலும் அறிக. மறுமைக் கண் இவையும் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கொல்வார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது. அருள் உடைமை முதல் கொல்லாமை ஈறாகச் சொல்லப்பட்ட இவற்றுள்ளே சொல்லப்படாத விரதங்களும் அடங்கும், அஃது அறிந்து அடக்கிக் கொள்க. ஈண்டு உரைப்பின் பெருகும்.)


Manakkudavar

(இதன் பொருள்) முற்பிறப்பின்கண் உயிரை யுடம்பினின்று நீக்கினார் இவரென்று பெரியோர் கூறுவர்; குற்றமான வுடம்பினையும் ஊணுஞ் செல்லாத தீய பனை வாழ்க்கையினையும் உடையாரை,
(என்றவாறு). இது கொலையினால் வருங் குற்றங் கூறிற்று.