குறள் 329

கொல்லாமை

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து

kolaivinaiya raakiya maakkal pulaivinaiyar
punmai thaerivaa rakaththu


Shuddhananda Bharati

Non

Those who live by slaying are
Eaters of carrion bizarre!


GU Pope

Not killing

Whose trade is 'killing', always vile they show,
To minds of them who what is vileness know.

Men who destroy life are base men, in the estimation of those who know the nature of meanness.


Mu. Varadarajan

கொலைத்தொழிலினராகிய மக்கள்‌ அதன்‌ இழிவை ஆராய்ந்தவரிடத்தில்‌ புலைத்தொழிலுடையவராய்த்‌ தாழ்ந்து தோன்றுவர்‌.


Parimelalagar

கொலை வினையர் ஆகிய மாக்கள் - கொலைத் தொழிலையுடையராகிய மாந்தர், புன்மை தெரிவார் அகத்துப் புலைவினையர் - அத்தொழிலின் கீழ்மையை அறியாத நெஞ்சத்தராயினும், அறிவார் நெஞ்சத்துப் புலைத் தொழிலினர்.
விளக்கம்:
('கொலை வினையர்' என்றதனான், வேள்விக் கண் கொலையன்மை அறிக. 'புலை வினையர்' என்றது தொழிலால் புலையர் என்றவாறு. இம்மைக்கண் கீழ்மை எய்துவர் என்பதாம்.)


Manakkudavar

(இ- ள்.) கொலைத்தொழிலினை யுடையராகிய மாக்கள் பொல்லாமையை யாராய்வாரிடத்து, தொழிற்புலையராகுவர்,
(என்றவாறு). இவரை உலகத்தார் கன்ம சண்டாளரென்று சொல்லுவார்.